பாரீஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 5,000 மீட்டர் ஓட்டத்தில், நார்வே நாட்டைச் சேர்ந்த ஜேக்கப், 13 நிமிடம் 13.66 விநாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.
பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில், கென்யாவின் ஃபெய்த் கிம்யேகான், பந்தய தூரத்தை 3 நிமிடம் 51.29 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார். இப்போட்டியில், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நபர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில், ஜப்பானைச் சேர்ந்த ஹருகா ஹிடாகுச்சி, 65.80 மீட்டர் தூரம் எரிந்து தங்கம் வென்றார்.
ஆண்களுக்கான மாடர்ன் பென்ட்டதலான் போட்டியில், எகிப்து நாட்டைச் சேர்ந்த அஹமத் எல்கெண்டி, 1,555 புள்ளிகள் பெற்று உலக சாதனையுடன், தமது நாட்டுக்கு முதல் தங்கப்பதக்கத்தை வென்றார்.
ஆண்களுக்கான ஃப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியில், 74 கிலோ பிரிவில் உஸ்பெகிஸ்தான் வீரர் ஜமாலாவ், 125 கிலோ பிரிவில் ஜியார்ஜியாவின் ஜீனோ தங்கம் வென்றனர்.