பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆடவர் பிரிவின் இறுதிச் சுற்றுக்கு 12 வீரர்கள் முன்னேறிய நிலையில், நீரஜ் சோப்ரா, தனது 2வது முயற்சியில் அதிகபட்சமாக 89 புள்ளி 45 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார்.
அதேசமயம், பாகிஸ்தானின் அர்ஷத் நதீம், ஒலிம்பிக்கில் இதுவரை இல்லாத அளவில் 92 புள்ளி 97 மீட்டர் தூரம் எறிந்து சாதனை படைத்ததுடன் தங்க பதக்கத்தையும் தட்டி சென்றார். நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றதன் மூலம் இந்தியாவுக்கு இந்த ஒலிம்பிக்கில் முதல் வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.
நீரஜ் சோப்ராவின் சொந்த ஊரில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் இந்த வெற்றியைக் கொண்டாடினர். ஒலிம்பிக்கில் 2-வது முறையாக பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.