டெப்பி புயலால் பெய்த கனமழையால் தென்கிழக்கு அமெரிக்காவின் ஃபுளோரிடா, ஜியார்ஜியா, சவுத் கரோலினா உள்ளிட்ட மாகாணங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
புளோரிடா, சவுத் கரோலினாவில் பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் தேங்கியதால் போக்குவரத்து முடங்கியது.
ஃபுளோரிடாவில் வெள்ளத்தில் சிக்கிய வாகனத்தில் தவித்தவர்களை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.