பாரீஸ் ஒலிம்பிக்கில் தடகளப் போட்டிகளில் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்காவின் கேப்பி தாமஸ் தங்கம் வென்றார். 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற செயின்ட் லூசியா நாட்டின் ஜூலியன் ஆல்ஃபிரெட் வெள்ளி வென்றார்.
ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் கிரீஸ் நாட்டின் மில்டியாடிஸ் டென்டோகுளோ 8 புள்ளி 48 மீட்டர் தூரம் தாண்டி தங்கம் வென்றார். அமெரிக்காவின் கார்ல் லூயிஸுக்கு அடுத்து தொடர்ந்து இரண்டாவது ஒலிம்பிக்கில் நீளம் தாண்டுதலில் தங்கம் வென்று சாதனை படைத்தார்.
பெண்களுக்கான சங்கிலிக் குண்டு எறிதலில் கனடாவின் கேம்ரின் ரோஜர்ஸ் 76.97 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார்.
பெண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில், பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த வின்ஃபிரெட் யாவி, 8 நிமிடம் 52.76 விநாடிகளில் கடந்து ஒலிம்பிக் சாதனையுடன் தங்கம் வென்றார்.