எந்த ஒரு நபரும், அடைக்கலம் கோரியோ அல்லது தற்காலிக அகதியாகவோ பிரிட்டனுக்கு நேரடியாகப் பயணம் மேற்கொள்ள அந்நாட்டு குடியேற்ற விதிகளில் இடமில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக மாணவர்களின் போராட்டம் காரணமாக, பிரதமர் பதவியை ராஜிநாமா செய்த ஷேக் ஹசீனா, பிரிட்டனில் அரசியல் அடைக்கலம் கோரியுள்ளார்.
இந்த நிலையில், பிரிட்டனில் அடைக்கலம் கோருபவர்கள், பாதுகாப்பான நாட்டில் முதலில் தஞ்சமடைவதுதான் அவர்களுக்குப் பாதுகாப்பு என்று அந்நாட்டு உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதே நேரத்தில், அடைக்கலம் கோரும் முறையான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதாகவும் அவர்கள் கூறினர். பிரிட்டன் பிரஜையான தனது சகோதரி ஷேக் ரிஹானா மற்றும் பிரிட்டிஷ் எம்.பியாக உள்ள உறவினர் மூலம் பிரிட்டனில் அடைக்கலம் பெறும் முயற்சியில் ஷேக் ஹசீனா ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.