மூளையில் சிப் பொருத்தப்பட்ட இரண்டாவது நோயாளியின் உடல்நிலையிலும் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், 400 எலெக்ரோடுகளும் சிறந்த செயல்பாட்டில் உள்ளதாகவும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத் தலைவர் எலன் மஸ்க் கூறியுள்ளார்.
இவரது துணை நிறுவனமான நியூராலிங்க் சார்பில், நடப்பு ஆண்டில் இதுபோன்று மேலும் 8 நோயாளிகளுக்கு மூளையில் சிப் பொருத்தி கம்ப்யூட்டர் மூலம் கண்காணிக்கும் சோதனை நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.