வங்கதேசத்தில், அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகும் வரை நாடு தழுவிய ஒத்துழையாமை பிரசாரத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
பேச்சு நடத்த வருமாறு பிரதமர் ஷேக் ஹசீனா விடுத்த அழைப்பை நிராகரித்த அவர்கள், பிரதமர் பதவி விலகி, விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த 11 நாள்களுக்கு மொபைல் இன்டர்நெட் சேவையை முடக்கியுள்ள அரசு, நாடு முழுவதும் ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. இட ஒதுக்கீட்டை எதிர்த்து கடந்த மாதம் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.