ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹானியே வின் இறுதிச் சடங்குகள் கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்றன. கத்தாரில் உள்ள மிகப்பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற சடங்குகளில் நூற்றுக்கணக்கானோர் கலந்துக் கொண்டனர்.
துருக்கியும் பாகிஸ்தானும் ஒருநாள் துக்க தினம் அனுசரிப்பதாக அறிவித்தன. ஈரானில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் மரணத்துக்கு இஸ்ரேலை பழிவாங்குவோம் என்று ஈரான் ராணுவம் சூளுரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.