துருக்கி நாட்டு உளவுத்துறை மேற்கொண்ட முயற்சியால், அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி உட்பட 7 நாடுகளுக்கு இடையே 26 சிறை கைதிகளின் பரிமாற்றம் நடைபெற்றது.
ரஷ்ய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க பத்திரிகையாளர் இவான் கெர்ஷ்கோவிச், முன்னாள் அமெரிக்க ராணுவ வீரர் பால் வீலன் உள்பட 3 பேர் அமெரிக்கா திரும்பினர்.
அதேபோல் வெவ்வேறு நாட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருந்த ரஷ்யர்கள் 10 பேரும், ஜெர்மனி நாட்டவர் 13 பேரும், துருக்கிக்கு அழைத்து வரப்பட்டு அவரவர் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாஸ்கோ திரும்பிய ரஷ்யர்களை அதிபர் புடின் நேரில் சென்று வரவேற்றார்.