பாகிஸ்தானில் விலைவாசி மற்றும் மின்கட்டண உயர்வை கண்டித்து 2 நாட்களாக தர்ணா போராட்டங்கள் நடந்துவருகின்றன.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து அண்மையில் 7 பில்லியன் டாலர் கடன் வாங்கிய பாகிஸ்தான் அரசு, அந்த அமைப்புடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மின் கட்டணத்தை உயர்த்தியது.
அதை கண்டித்து, அந்நாட்டின் தீவிர மதவாத கட்சி நடத்திவரும் போராட்டத்தில் இரவு பகல் பாராமல் மக்கள் கலந்துகொண்டனர். நாடாளுமன்றத்தை அவர்கள் முற்றுகையிடாத வண்ணம் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.