மனித தோலின் திசுவை வளர்த்து முகவடிவில் செய்து அதை ரோபோ தொழில்நுட்பத்தில் சிரிக்க வைத்துள்ளதாக ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
டோக்கியோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள முகம், விரல் உள்ளிட்ட பாகங்களில் இயக்கத்தை ஏற்படுத்த முடிந்ததாக விஞ்ஞானி டகாச்சி கூறினார்.
தோல் திசுக்களில் இருந்து மனித முழுஉடல் அளவிலான ரோபோவை உருவாக்கும் முயற்சியில் இதை முக்கிய படியாக கருதுவதாக டகாச்சி மேலும் தெரிவித்தார்.