பிரான்ஸ் நாட்டில் ஒலிம்பிக் போட்டிகள் வரும் 26ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், பாரிஸ் நகரின் முக்கிய பகுதிகளின் ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் நடைபெற்றது.
கடந்த 2 மாதங்களாக பிரான்சின் பல இடங்களை கடந்து சென்ற ஒலிம்பிக் ஜோதி, பாரிஸ் நகரை ஞாயிற்றுக் கிழமை சென்றடைந்தது.
வீரர் ஒருவரின் நினைவிடம் ஒன்றில் இருந்து ராணுவ பேண்ட் இசை முழங்க ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் தொடங்கியது
ஈபிள் கோபுரம் முன்பு மக்கள் திரண்டு மிகுந்த ஆரவாரத்துடன் ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தை வரவேற்றனர்
புதுமையான கட்டிடக்கலையை சாத்தியமாக்கிய லூயிஸ் உய்ட்டன் அறக்கட்டளையின் அருங்காட்சியகத்தில் ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் நடைபெற்றது.