பிரான்ஸ் நாட்டில் இருந்த மன்னராட்சி மக்கள் புரட்சி மூலம் தகர்க்கப்பட்டு முடிவுக்கு வந்ததை கொண்டாடும் பிரெஞ்சு தேசிய தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
அதன் ஒரு நிகழ்வாக டிஸ்னிலேண்ட் பாரிஸ் என்ற பொழுதுபோக்கு பூங்கா சார்பில் நடத்தப்பட்ட தேசிய தின கொண்டாட்டத்தில் வானத்தில் ட்ரோன் கோரியோகிராஃபி வாயிலாக மிக்கி மவுஸ் கதாபாத்திரத்தை ஒளிரச் செய்தனர்
"பியூட்டி அண்ட் தி பீஸ்ட்" மற்றும் "ஸ்லீப்பிங் பியூட்டி" போன்ற கார்ட்டூன் திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்களை ட்ரோன் கோரியோகிராஃபி வாயிலாக உருவாக்கி வானில் ஒளி வெள்ளம் உருவாக்கப்பட்டது
இந்த நிகழ்வில் வாணவேடிக்கை நிகழ்ச்சியும் இடம்பெற்றது. அப்போது கூடியிருந்த மக்கள் செல்போனில் வாண வேடிக்கையை படம்பிடித்தனர்