காசாவில் போர் நடவடிக்கையை அதிகப்படுத்த இருப்பதால் அங்கு வாழும் அப்பாவி பொதுமக்கள் பாதுகாப்பான பாதைகள் வழியாக நகரை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காசாவை யுத்தகளமாக அறிவித்துள்ள காசா தெற்குப்பகுதியில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு முகாம்களை நோக்கி நகருமாறு மக்களை வலியுறுத்தியுள்ளது. காசாவில் சுமார் இரண்டரை லட்சம் மக்கள் வசிக்கும் நிலையில் இஸ்ரேல் ராணுவம் காசா மக்களை வெளியேற்றும் நடவடிக்கை மிகுந்த கவலையளிப்பதாக ஐநா.சபை தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக காசாவின் பல்வேறு பகுதிகளுக்குள் இஸ்ரேல் ராணுவம் ஊடுருவி உள்ளது. ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன ஜிகாத் இயக்கங்களுடன் கடும் யுத்தம் தொடர்ந்து வருகிறது.