இந்தியா வளர்ச்சியடைந்து வரும் வேகத்தை உலகமே வியந்து பார்த்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மாஸ்கோவில் வசிக்கும் இந்தியர்கள் முன்னிலையில் உரையாற்றிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி டிரெய்லர் மட்டுமே என்றும், அடுத்த 10 ஆண்டுகளில் மேலும் அதிக வேகத்தில் வளர்ச்சியை உலகமே காணும் என்றும் கூறியுள்ளார்.
3 கோடி ஏழைகளுக்கு வீடுகள் வழங்கவும், 3 கோடி ஏழைப்பெண்களை லட்சாதிபதிகளாக்கவும் தமது அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். முன்னதாக, அதிபர் புதினை அவரது நோவோ - ஓகாரியோவோ இல்லத்தில் பிரதமர் மோடி சந்தித்தார். பேட்டரி காரில் பிரதமரை அமர வைத்துக் கொண்டு தமது வீடு, குதிரை தொழுவம் போன்றவற்றை புதின் சுற்றிக்காட்டினார்.