எல்லைப் பகுதியில் எஞ்சியுள்ள பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காண்பது குறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயுடன் நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் இடையே சீன அமைச்சருடன் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.
ராஜதந்திர மற்றும் ராணுவ நடவடிக்கைகள் மூலம் பிரச்னைகளைத் தீர்க்கும் முயற்சிகளை இரட்டிப்பாக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டதாக ஜெய்சங்கர் தெரிவித்தார்.
உண்மையான கட்டுப்பாட்டு கோட்டுக்கு மதிப்பளிப்பது, எல்லைப் பகுதியில் அமைதியை உறுதி செய்வது அவசியம் எனவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
பரஸ்பர மரியாதை, பரஸ்பர புரிதல், பரஸ்பர ஆர்வம் ஆகியவற்றின் மூலமே இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் வலுப்படும் என்று எக்ஸ் தளத்தில் ஜெய்சங்கர் பதிவிட்டுள்ளார்.