ரஷ்யாவில் 44 ஆயிரம் ஆண்டுகளாக உறைந்த நிலையில் இருந்த ஓநாயின் சடலத்தில் விஞ்ஞானிகள் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். குளிர் காலத்தில் மைனஸ் 64 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் யகூஷியா பகுதியில் 3 ஆண்டுகளுக்கு முன் இந்த ஓநாயின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த ஓநாய் சதுப்பு நிலத்தில் சிக்கி, உறைந்து போய் இறந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அதன் இரைப்பையில் உள்ள எச்சங்களுக்கு மரபணு சோதனை செய்வதன் மூலம் 44 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் வாழ்ந்த மற்ற உயிரினங்கள் பற்றி தெரிந்துகொள்ள முடியும் என அவர்கள் தெரிவித்தனர்.