கென்ய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட இருந்த வரி உயர்வு மசோதாவை அரசு திரும்ப பெற்றபோதும், தொடர்ந்து போராட்டங்கள் நடந்துவருகின்றன.
வரியை உயர்த்தப்போவதாக அந்நாட்டு அரசு கடந்த வாரம் அறிவித்தபோது, முதலில் சமூக வலைத்தளங்களில் கிளம்பிய எதிர்ப்பு, பின் கண்டன பேரணிகளாக மாறி, நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைக்கும் அளவுக்கு நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றது.
கலவரங்களை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர். வரியை உயர்த்தப்போவதில்லை என அதிபர் வில்லியம் ரூட்டோ அறிவித்த பிறகும், அவர் பதவி விலக வலியுறுத்தி இளைஞர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.