2030-ஆம் ஆண்டுடன் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் செயல்பாடுகள் நிறுத்திக்கொள்ளப்பட உள்ள நிலையில், விண்வெளியில் செயல்பட்டுவரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை பூமிக்கு பாதுகாப்பாக கொண்டுவதற்கான விண்கலத்தை உருவாக்க எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் நாசா ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
யு.எஸ். டிஆர்பிட் வெஹிக்கிள் என்ற பெயரில் அந்த விண்கலத்தை உருவாக்க சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
விண்வெளி ஆய்வு மையத்தை பூமிக்குக் கொண்டுவந்து பசிபிக் பெருங்கடலில் ஓரிடத்தில் வைக்க நாசா திட்டமிட்டுள்ளது. பன்னாட்டு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் 4 லட்சத்து 30 ஆயிரம் கிலோ எடையுடன் விண்வெளியில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய ஒற்றை அமைப்பாக, 1998-ஆம் ஆண்டு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை நாசா மையம் அமைத்தது