பிரிட்டன் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, தாய் நாடான ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டார். ஆஃப்கானிலும், ஈராக்கிலும் அமெரிக்க ராணுவம் போர் குற்றங்களில் ஈடுபட்டதாக கூறி, பல ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளத்தில் அசாஞ்சே வெளியிட்டிருந்தார்.
அமெரிக்காவிடம் இருந்து தப்பிக்க பிரிட்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்த அசாஞ்சே, 7 ஆண்டுகளாக அங்கிருந்தபடியும், பின் 5 ஆண்டுகளுக்கு மேலாக லண்டன் சிறையில் இருந்தபடியும், அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதை தடுக்க சட்டப்போராட்டம் நடத்திவந்தார்.
தான் செய்த தவறை அமெரிக்க நீதித்துறை அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்ட அசாஞ்சே, அவர்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.