24 ஆண்டுகளுக்குப் பின் வடகொரியா சென்ற ரஷ்ய அதிபர் புடின், வடகொரிய அதிபர் கிம் ஜான் உன்னுடன் இணைந்து ரகசிய ராணுவ உடன்படுக்கை ஒன்றில் கையெழுத்திட்டார்.
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஒளரஸ் லிமஸினை கிம் ஜாங்கிற்கு பரிசளித்த புடின், கிம் ஜாங்கை அருகில் அமரவைத்து காரை இயக்கி காட்டினார். அதை தொடர்ந்து கிம் ஜாங் உன் காரை ஓட்டினார்.
பின் இரு நாட்டு தலைவர்களும் சேர்ந்து காலா இசை கச்சேரியை கண்டுகளித்தார்.
வடகொரியா சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வியட்நாம் புறப்பட்ட புடினை, அதிபர் கிம் ஜாங் உன் விமான நிலையம் வந்து வழியனுப்பி வைத்தார்.