சிகரெட் பாக்கெட்டிலும், மது பாட்டிலிலும் உடல் நல பாதிப்பு குறித்த எச்சரிக்கை வாசகம் இருப்பதைப்போல், சமூக வலைத்தள செயலிகளில், மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்ற எச்சரிக்கை வாசகம் இருக்க வேண்டும் என அமெரிக்க பொதுசுகாதாரத்துறை தலைமை மருத்துவர் விவேக் மூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
தினமும் 3 மணி நேரம் சமூக ஊடகங்களில் செலவிடுவோருக்கு மன அழுத்தம் இரட்டிப்பாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிலும், பதின்பருவ சிறுமிகள் அதிகம் பாதிக்கப்படுவதாக எச்சரித்த தலைமை மருத்துவர் விவேக் மூர்த்தி, பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயலிகளில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறுவதை கட்டாயமாக்குமாறு அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.