ஸ்டெப்பி புல்வெளியால் பெயர் பெற்ற கிழக்காசிய நாடான மங்கோலியாவில் நிலவி வரும் தீவிர பனிப்புயல் காரணமாக நடப்பாண்டில் இதுவரையில் சுமார் 70 லட்சம் கால்நடைகள் இறந்துள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
புல்வெளிகளின் மீது அடர்த்தியாக தேங்கியிருக்கும் பனியால் மற்ற கால்நடைகளுக்கு உணவு கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும், கால்நடை வளர்ப்பை முக்கிய பொருளாதாரமாக கொண்டிருக்கும் நாட்டிற்கு இது பெரிய பேரழிவு என கூறப்படுகிறது.
புல்வெளியில் ஆங்காங்கே இறந்து கிடக்கும் கால்நடைகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது மற்றொரு சவாலாக உள்ளதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது.