விளைநிலங்களில் பயிர்கள் மற்றும் வளர்ந்த புற்களை பெரிய வேளாண் இயந்திரங்கள் மூலம் அகற்றும்போது பயிர்களுக்குள் மறைந்திருக்கும் விலங்குகள் கொல்லப்படுவதை தடுக்க ஸ்விட்சர்லாந்தில் தன்னார்வலர்கள் ட்ரோன்களை பயன்படுத்துகின்றனர்.
ட்ரோன் கேமரா மூலம் பயிர்களுக்குள் மறைந்துள்ள விலங்குகளை அடையாளம் கண்டு விரட்டிய பிறகு அறுவடை செய்வது மற்றும் பதர்களை அழிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.