அமெரிக்காவின் கேப் கெனாவரல் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படவிருந்த போயிங் ஸ்டார்லைனர் நிறுவனத்துக்குச் சொந்தமான விண்கலத்தின் பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
கணினி தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, இன்ஜின் எரியூட்டப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக நிறுத்தப்பட்டதாக நாஸா தெரிவித்துள்ளது.
நாஸாவை சேர்ந்த புச் வில்மோருடன் சேர்ந்து சர்வதேச விண்வெளி மையத்துக்குத் தனது மூன்றாவது விண்வெளிப் பயணத்தை இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட சுனிதா வில்லியம்ஸ் மேற்கொள்ளவிருந்தது குறிப்பிடத்தக்கது.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் திட்டத்துக்குப் போட்டியாக ஸ்டார்லைனர் திட்டத்தை போயிங் நிறுவனம் முன்னெடுத்துள்ளது.