இங்கிலாந்து நாட்டின் செஸ்டர் உயிரியல் பூங்காவில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 11 ஹம்போல்ட் பென்குயின்கள் பிறந்துள்ளன.
தாய் பென்குயின்கள் மீன்களை விழுங்கி,வயிற்றில் செமித்து ஆக்கப்பட்ட கரைசலை மீண்டும் வாய் பகுதிக்கு கொண்டுவந்து குஞ்சுகளுக்கு ஊட்டிவருவதாக பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர்.
தென் அமெரிக்க கடற்கரை பகுதிகளில் வசித்துவரும் இந்த சிறிய வகை பென்குயின்கள், மீனவர்கள் அதிகளவில் நெத்திலி மீன்களை பிடித்துவிடுவதால் உணவின்றி வேகமாக அழிந்துவருகின்றன.