2009 ஆம் ஆண்டு ஈழப் போரில், தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது போல் தவறான ஒரு கருத்தை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் மீண்டும் பதிவு செய்துவருவதாக இலங்கை அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
கனடா வாழ் தமிழர்களின் வாக்குகளை பெறுவதற்காக ஜஸ்டின் ட்ரூடோ அவ்வாறு பேசிவருவதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அருணி விஜயவர்தனா தெரிவித்துள்ளார். அது தொடர்பாக, கனடா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மே-18 ஆம் தேதியை, தமிழர்கள் இனப்படுகொலை நாளாக அனுசரிக்க கனடா நாடாளுமன்றத்தில் 2 ஆண்டுகளுக்கு முன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.