அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றால், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கை வெள்ளை மாளிகையின் ஆலோசகர் பதவியில் நியமிக்க பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இது குறித்து எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், எல்லைப் பிரச்னை, பொருளாதாரம், வாக்குப்பதிவு முறைகேட்டை தடுப்பது உள்ளிட்ட விஷயங்களில் எலாக் மஸ்க் உதவுவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டிரம்புக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வது குறித்து அவருடன் எலான் மஸ்க் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.