ஆஸ்திரேலியாவில் பெர்த் நகரில் இருந்து மெல்பர்ன் நகருக்குச் சென்ற விர்ஜின் விமானத்தில், ஆண் பயணி ஒருவர் விமானத்தை தரையிறக்கக் கோரி விமானி அறையை நோக்கி நிர்வாணமாக ஓடியதுடன், விமானப் பணிப்பெண்ணைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் இச்சம்பவம் நடைபெற்ற நிலையில், விமானம் மீண்டும் பெர்த் நகருக்குத் திரும்பியது.
போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்தப் பயணி, மனநலப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடைபெற்ற சம்பவத்துக்கு விமான நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.