கம்போடியா - சீனா இடையே நடைபெறும் கோல்டன் டிராகன் 2024 கூட்டு ராணுவப் பயிற்சியில் இயந்திர துப்பாக்கி பொருத்தப்பட்ட ரோபோ நாயை சீன ராணுவம் அறிமுகம் செய்தது. ரிமோட் மூலம் இயங்கக் கூடிய இந்த ரோபோ நாய், நடந்து, குதித்து, கீழே விழுந்து, பின்புறமாக ஓடிய காட்சிகள் வெளியாகியுள்ளன.
15 கிலோ எடை கொண்ட ரோபோ நாய் மீது பொருத்தப்பட்டுள்ள துப்பாக்கியில் 4D லென்ஸ் உதவியுடன் துல்லியமாக ரிமோட் மூலம் சுட முடியும் என்ற சீன ராணுவத்தினர், இதன்மூலம் போரின்போது மனித உயிரிழப்பை தவிர்க்கலாம் என்றனர்.