மெக்சிகோவில் சூறாவளி தாக்கியதில் தேர்தல் பிரசார மேடை சரிந்து 9 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். ஐம்பதுக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அந்நாட்டில் ஜூன் 2-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,குடிமக்கள் இயக்கம் என்ற கட்சி சார்பில் பிரசார கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்ட மேடையில் முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குழுமி இருந்த போது சூறாவளி தாக்கியது. அதில், சாமியானா தூக்கி வீசப்பட்டு மேடை சரிந்தது.