அமெரிக்காவில் பனி மூட்டம் நிறைந்த சாலையில் செல்ஃப் டிரைவிங் எனப்படும் தானியங்கி முறையில் இயக்கப்பட்ட டெஸ்லா கார், லெவல் கிராசிங்கில் நிற்காமல் ரயில் மீது மோதச் சென்றதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
ஒஹையோவைச் சேர்ந்த கிரேய்க் என்ற அந்நபர், கார் நிற்காமல் சென்றதால் சுதாரித்துக் கொண்டு தானாக ஸ்டீயரிங்கை திருப்பி கன நொடியில் உயிர் தப்பியதாக கூறியுள்ளார்.
லெவல் கிராஸிங்கின் பக்கவாட்டில் மோதி காரின் முன்பகுதி சேதம் அடைந்ததாகவும், இதற்கு முன்பு வேறொரு முறையும் ஆட்டோ பைலட் முறை சரியாக இயங்காமல் ரயில் மீது மோதச் சென்றதாக அவர் சமூக வலை தளத்தில் கூறியுள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளில், ஆட்டோ பைலட் மூலம் இயக்கப்பட்ட டெஸ்லா கார்களால் அமெரிக்காவில் 700-க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டு 17 பேர் உயிரிழந்தனர்.