தென் அமெரிக்க நாடான சிலியில், அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட 4 வயது குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு தேவைப்படும் 30 கோடி ரூபாயை திரட்டுவதற்காக அவரது தாயார் நீண்ட நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
டுஷென் மஸ்குலர் டிஸ்டிரோஃபி என்ற தசை சீரழிவு நோயால் தனது 4 வயது மகன் தாமஸ் பாதிக்கப்பட்டுள்ளது கமீலா கோமஸுக்கு கடந்தாண்டு தெரியவந்தது.
உடலின் ஒவ்வொரு தசையாக செயலிழந்து, இறுதியில் இதயமும், சுவாச தசைகளும் செயலிழந்து உயிரிழப்பை ஏற்படுத்தும் இந்நோய்க்கு அமெரிக்காவில் ஜீன் தெரபி முறையில் சிகிச்சை அளிக்கப்படுவதை அறிந்த கமீலா அதற்கு தேவைப்படும் 30 கோடி ரூபாயை திரட்ட நடை பயணம் மேற்கொண்டுவருகிறார்.
10 லட்சம் பேரிடம் தலா 300 ரூபாய் வீதம் வசூலிக்க இலக்கு நிர்ணயித்த கமீலா, 600 கிலோமீட்டர் தொலைவு நடந்து 70 சதவீத நிதி திரட்டி உள்ளதாக தெரிவித்தார்.