அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் அதிபர் ஜோ பைடன் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் இருவரும் இந்த ஆண்டு ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நேருக்கு நேர் விவாதிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜூன் 27-ஆம் தேதி சி.என்.என் தொலைக்காட்சியிலும், செப்டம்பர் 10-ஆம் தேதி ஏ.பி.சி நியூஸ் தொலைக்காட்சியிலும் இருவரும் விவாதிக்க உள்ளனர். அண்மைகாலமாக, இருவரும் ஒருவரை ஒருவர் விமர்சித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
2020-ஆம் ஆண்டில் என்னிடம் இரு விவாதங்களில் தோற்ற டிரம்ப், அதன்பிறகு விவாதத்துக்கு வராமல் இப்போது விவாதிக்க விரும்புவதுபோல் நடிப்பதாக பைடன் வீடியோ வெளியிட்டிருந்தார். பைடனால் இரண்டு வாக்கியங்களைத் தொடர்ந்தார்போல் பேச முடியாது என்றும், அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமான அதிபர் அவர்தான் என்றும் டிரம்ப் அதற்குப் பதிலளித்துள்ளார்.