விண்ணில் இருந்து 250 அடி நீள JB2 என்ற விண்கல் இன்று பூமிக்கு அருகே வர வாய்ப்புள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா தெரிவித்துள்ளது.
பெரிய கட்டிடம் ஒன்றின் அளவில் இருக்கும் விண்கல், மணிக்கு 63 ஆயிரத்து 683 கிலோ மீட்டர் வேகத்தில் பூமிக்கு மிக அருகில் கடக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
இந்த விண்கல் பூமியில் இருந்து சுமார் 27 லட்சம் மைல்கள் தொலைவில் கடந்து செல்லும் என்பதால் ஆபத்து எதுவும் இல்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.