சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தமது பாட்டி வீடு அமைந்துள்ள மலைப்பகுதி கிராமத்திற்கு அழைத்துச் சென்று உபசரித்தார்.
பாரிஸ் நகரில் இருந்து 800 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தர்பேஸ் என்ற மலை கிராமத்தில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் சீன அதிபர் மற்றும் அவரது மனைவிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது
உணவகம் ஒன்றில் சீன அதிபருடன் உணவு உண்டபோது, தமது குழந்தை பருவ நினைவுகளை இம்மானுவேல் மேக்ரான் பகிர்ந்து கொண்டார்.