சர்வதேச கடற்பரப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தங்கள் நாட்டு ராணுவ ஹெலிகாப்டர் மீது சீன போர் விமானம் தீச்சுடர்களை வீசியதாக ஆஸ்திரேலியா குற்றம்சாட்டியுள்ளது.
ஐ.நா. விதித்துள்ள தடையை மீறி வடகொரியாவிற்கு பொருட்கள் கடத்தப்படுகின்றனவா என கண்காணிக்கும் பணியில் ஆஸ்திரேலிய ஹெலிகாப்டர் ஒன்று ஈடுபட்டிருந்தது.
எதிரி நாட்டு ஏவுகணைகளை குழப்புவதற்காக போர் விமானங்கள் வெளியிடும் தீச்சுடர்களை, ஆஸ்திரேலிய ஹெலிகாப்டரை நோக்கி சீன போர் விமானம் வெளியிட்டதாகவும், ஹெலிகாப்டர் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகவும் ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.