தைவானில் கடந்த ஒரே மாதத்தில் ஆயிரத்து 300 நில அதிர்வுகள் உணரப்பட்ட நிலையில், பள்ளிக் கூட மாணவர்கள் 2 பேர் உருவாக்கிய மொபைல் ஆப் அந்நாட்டில் பெரும் பிரபலமடைந்துள்ளது.
2022-ஆம் ஆண்டு லின் ருயீ, குவோ சென் யூ என்ற அந்த மாணவர்கள் நில நடுக்கத்தைக் கண்காணிக்க உருவாக்கிய செயலியை சில வாரங்களுக்கு முன் வரை வெறும் மூவாயிரம் பேரு மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.
தொடர் நில நடுக்கங்களை அடுத்து, தற்போது அதன் பயனர் எண்ணிக்கை 3 லட்சத்து 70 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அந்நாட்டு அரசு எச்சரிக்கை அமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ள நிலையில், அது சில சமயங்களில் வேலை செய்யவில்லை என்றும், மாணவர்கள் உருவாக்கிய அமைப்பு எளிமையாகவும் பலன் தரும் வகையிலும் உள்ளதாகவும் அந்நாட்டு மக்கள் கூறியுள்ளனர்.