தேவையிருக்கும் வரை, உக்ரைனுக்கு அனைத்து வகையான உதவிகளும் வழங்கப்படும் என பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் கேமரூன் தெரிவித்தார்.
உக்ரைனுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார். உக்ரைனுக்கு 3 பில்லியன் பவுண்ட் நிதி உதவி அளித்ததற்காக, கேமரூனிடம் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துக்கொண்டார்.
உக்ரைனுக்கு நிதி உதவி தவிர, ஆயுத உதவி, ராணுவப் பயிற்சி உள்ளிட்டவையும் வழங்கப்படும் என்றும் டேவிட் கேமரூன் தெரிவித்தார்.