2 வாரங்களுக்கு முன் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து துபாய் நகரம் படிப்படியாக மீண்டுவரும் நிலையில், இன்று மீண்டும் பரவலாக மழை பெய்தது.
ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றுமாறும், பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்பு நடத்துமாறும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
காலநிலை மாற்றத்தால், வருங்காலத்தில், வளைகுடா நாடுகளில் வெப்பம் மேலும் அதிகரித்து, கனமழை, வெள்ளங்களுக்கு வழிவகுக்கும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
துபாய் போன்ற நகரங்களில், முறையான மழைநீர் வடிகால் இல்லாததால் வெள்ளம் வடிவதில் தாமதம் ஏற்பட்டு மக்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.