ஹாங்காங்கில், சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாக வானமே ஒளிரும் வகையில் பிரம்மாண்ட வாண வேடிக்கை நடத்தப்பட்டது. விக்டோரியா துறைமுகம் அருகே நடத்தப்பட்ட வாண வேடிக்கையை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர்.
மே தினத்தை முன்னிட்டு சீனாவில் ஒருவார காலம் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், ஹாங்காங்கில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்களை வரவேற்கும் வகையில் நடத்தப்பட்ட வாண வேடிக்கை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.