சீனாவின் குவாங்டோங் மாகாணத்தின் மலைப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த நெடுஞ்சாலையின் ஒரு பகுதி தீடீரென சரிந்தது. அப்போது அவ்வழியாக சென்ற கார்கள் பள்ளத்தில் விழுந்து தீப்பற்றி எரிந்தன.
விபத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுமார் 60 அடி தொலைவிற்கு சாலை ஏன் திடீரென சரிந்தது என அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.