சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள யூனியன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், நோயாளிகளின் மன அழுத்தத்தை குறைப்பதற்காக இசை கச்சேரிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சிகிச்சைக்காக நோயாளிகள் காத்திருக்கும் நேரத்தில் அவர்களுக்கு ஏற்படக் கூடிய பதற்றத்தை தணிக்கும் முயற்சியாக, மருத்துவர்களும், மருத்துவ கல்லூரி மாணவர்களும் இணைந்து மெல்லிசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். நோயாளிகள் மத்தியிலும் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.