டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், தனி விமானம் மூலம் சீனாவுக்குத் திடீர் பயணம் மேற்கொண்டார். தலைநகர் பீஜிங்கில், சீன பிரதமரை சந்தித்துப் பேசினார்.
சீனாவில் ஓட்டுநர் இல்லாமல் தானாக காரை இயக்கும் மென்பொருள் அறிமுகம் உள்ளிட்டவை தொடர்பாக சீன அரசுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில், டெஸ்லா நிறுவனத்தில் பணிச்சுமை அதிகமாக உள்ளதாகக் கூறி, பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவிருந்த இந்தியப் பயணத்தை ரத்து செய்த எலான் மஸ்க், சீனாவுக்கு திடீரென பயணமாகியிருக்கிறார்.