காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரம்மாண்டமான பாலஸ்தீன கொடியை ஏற்றி வைத்தனர்.
அதிபர் ஜோ பைடனின் பாதுகாப்புக்காக மோட்டார் சைக்கிளில் வந்த வீரர்களையும் வழிமறித்து காசாவில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை நிறுத்தும்படி கோஷங்களை எழுப்பினர்.
விருந்தினர்களுக்காக விரிக்கப்பட்ட சிவப்புக் கம்பளத்திலும் சிலர் ஓட முயன்ற போது போலீசாரால் விரட்டியடிக்கப்பட்டனர்.
இதனிடையே அமெரிக்காவின் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்களை ரப்பர் புல்லட்டுகளால் சுட்டு விரட்டிய போலீசார் சிக்கியவர்களை கைவிலங்கிட்டு குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர்