சீன நிறுவனமான பைட் டான்ஸ், தனது டிக்டாக் செயலியை ஏதேனும் ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு ஓராண்டிற்குள் விற்காவிட்டால், அச்செயலிக்கு முழுமையான தடை விதிக்கும் மசோதா அமெரிக்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
டிக்டாக் செயலியால், உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்த நிலையில், இந்த நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.