சீனாவில் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக புதைந்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 2015 முதல் 2022-ஆம் ஆண்டு வரை சுமார் 82 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், நாட்டில் உள்ள நகரங்களில் பாதி அளவு, ஆண்டுக்கு பத்து மில்லி மீட்டர் அளவுக்கு புதைந்து வருவதாகத் தெரியவந்துள்து.
அதிக அளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுதல், நகர்புற கட்டடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளின் அதிக எடை உள்ளிட்ட பல காரணங்களால் நகரங்கள் புதைந்து வருவதாகக் கூறப்படுகிறது. சீனத் தலைநகர் பீஜிங், ஆண்டுதோறும் 45 மில்லிமீட்டர் அளவுக்கு புதைந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.