ரஷ்யாவின் வான்வழித் தாக்குதலை எதிர்கொள்ள உக்ரைனுக்கு குறைந்தபட்சம் 7 பேட்ரியாட் ஏவுகணைகள் அல்லது பிற அதிஉயர் வான் பாதுகாப்பு அமைப்புகள் தேவைப்படுவதாக அந்நாட்டு அதிபர் ஸெலன்ஸ்கி தெரிவித்தார்.
நேட்டோ கவுன்சிலுக்கு அவர் அனுப்பிய காணொளியில், நட்பு நாடுகளிடம் இருந்து குறைந்த அளவிலேயே உதவிகள் கிடைப்பதாகவும், ரஷ்யாவைத் தோற்கடிக்கவும், உக்ரைனின் வான் எல்லை பாதுகாக்கவும் உக்ரைனுக்கான ராணுவ உதவியை நட்பு நாடுகள் அதிகரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்க நேட்டோ அமைப்பு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளதாக அதன் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.