காஸா போரை நிறுத்தி, ஹமாஸ் வசமுள்ள 100-க்கும் மேற்பட்ட பிணை கைதிகளை மீட்குமாறு இஸ்ரேல் அரசை வலியுறுத்தி பிணை கைதிகளின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல் எவிவ், ஜெருசலேம் நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலையின் குறுக்கே குப்பை தொட்டிகளை அடுக்கி தீ வைத்து அவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
போர் நிறுத்தம் தொடர்பாக மத்தியஸ்தம் செய்துவரும் கத்தார் அரசு, இஸ்ரேல், ஹமாஸ் பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.