ஊழல் மற்றும் சட்டவிரோத திருமணம் உள்ளிட்ட வழக்குகளில் தமது மனைவி புஸ்ரா பீபிக்கு சிறை தண்டனை கிடைத்த பின்னணியில் ராணுவ தலைமை தளபதி அசிம் முனிர் இருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றஞ்சாட்டி உள்ளார்.
அடியாலா சிறையில் இருக்கும் அவர், செய்தியாளர்களிடம் நடத்திய உரையாடலில், அசிம் முனிரின் அழுத்தம் காரணமாகவே, நீதிபதி தனது மனைவிக்கு சிறை தண்டனைவிதித்து தீர்ப்பளித்ததாக குற்றஞ்சாட்டி உள்ளார்.